கல்லூரி மாணவர்கள் செல்லோடு பேசித்திரிபவர்கள். இவர்கள் சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள். கொண்டாட்டத்தின் உச்சத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள். இப்படியொரு மாயபிம்பம் சித்திரமாய்ப் பதிந்து கிடக்கிறது. நாங்கள் அப்படியில்லை. எங்களுக்கு வழி சொல்ல ஒரு தலைமை இருந்தால் தனித்துவமானவர்கள் என்பதை எங்கள் செயல் சொல்லும். சல்லிக்கட்டுப் போராட்டம் கடலலையாக இருந்தபோதும் கரைதாண்டவில்லை. எல்லைக்குள் இருந்தோம் நல்லதே நடந்தது. இது இவர்கள் சொல்லும் சொல்.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஹிலாரிகாஸ் கலைவிழாவில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில் கலந்து கொண்டவர்களின் கவிதைகளைத் தொகுத்து “அரும்பு” என்ற தலைப்பில் அறிமுகப்படுத்துவதில் ஆனந்தப் படுகிறோம்.
Details
- Publication Date
- Feb 23, 2018
- Language
- Tamil
- ISBN
- 9781387592012
- Category
- Poetry
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): த. திலிப்குமார்
Specifications
- Format