
இலக்கணவியல் அணுகுமுறையில் தமிழிலக்கணங்கள்
ILAKKANVIYAL ANUGUMURAIYIL TAMIL GRAMMARS
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
தமிழ் மொழியின் மெய்ம்மைகளைப் பல்வேறு இலக்கணக் கலைஞர்கள் பேசியுள்ளனர். அவர்கள் தத்தமக்குக் கிடைத்தத் தரவுகளுக்கு ஏற்பத் தமிழ் மொழியமைப்பை விளக்கியுள்ளனர். இவ்விலக்கணக்கலைஞர்களின் சிந்தனை களைக் கொள்கை அடிப்படையிலும் கோட்பாடுகள் அளவிலும் சிந்தித்த ஆய்வுகள் உள்ளன. அந்தக் களங்களை மீளாய்விற்கு உட்படுத்தும் ஆய்வுகள் தற்பொழுதுதான் தொடங்கியுள்ளன. அந்த வரிசைநிலையே இவ்வாய்வும் அமைகின்றது.
இந்த ஆய்வில் இலக்கணவியல், வரலாற்றுநிலை - சமகாலநிலை, ஒப்புமையாக்கத்தின்வழி மொழிகற்றல், மொழி ஓர் அமைப்பொழுங்கு, தனிநிலைக் கோட்பாடு, மீக்கோட்பாடு ஆகிய தன்மைகள் பேசப்பட்டுள்ளன.இவ்வாய்வில் இலக்கணச் சிந்தனைகள் மட்டுமின்றி இலக்கணக் கலைஞர்களின் மீப்பண்புகளும் இனங்காணப் பெற்றுள்ளன. தொல்காப்பியம் தொடங்கி ஏழாம் இலக்கணநூல்கள் வரைக்கும் உள்ள தரவுகள் ஆங்காங்கே விளக்கத்திற்கு உட்படுத்தப்பெற்றுள்ளன. இதன் மூலம் ஆய்வறிஞர் சு. இராசாராம் அவர்கள் உருவாக்கியுள்ள மீக்கோட்பாடுகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ளலாம். அதாவது, தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ள நேமிநாதம் எவ்வாறு படகாக அமைந்ததோ அதுபோல இவ்வாய்வு இலக்கணவியல் மீக்கோட்பாடு கோட்பாடுகளும் எனும் மீக்கோட்பாட்டு நூலைப் புரிந்துகொள்ள உதவும் என்பதாகும்.
ஆய்வறிஞர் பொற்கோ அவர்கள் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவு ஒருங்கிணைத்த உரைத்தொடரில் ஒரு கருத்தை முன்வைத்தார். அக்கருத்தாவது ஐ எனும் உயிர் வடிவம் இருப்பினும் அய் எனும் வடிவமே பல்வேறு வகையில் மொழிக்கட்டமைப்பில் பயன் நல்கும் என்றும் தொல்காப்பியர் ஏதோ வரலாற்றியல் கண்ணோட்டத்தில் ஐ எனும் வடிவத்தைக் கையாண்டுள்ளார் என்றும் அதனைக் கண்டறிதல் வேண்டும் என்றும் என்பதாகும். அதற்கான விடையைத் தரும் மீள்வாசிப்பிற்குரிய வாய்பாடாக வரலாற்றுநிலை - சமகாலநிலை எனும் மீக்கருத்தியல் வாய்பாடு அமையும். இது ஒரு கருதுகோளே.
ஓரிலக்கணக் கலைஞரையோ ஓரிலக்கணம் முன்னிறுத்தும் மொழி மெய்ம்மைகளையோ மீள்வாசிப்புச் செய்யும்பொழுது அதனதனின் தனிநிலைப் பண்பையும் இனங்காண முடியும். அதனை இவ்வாய்வு நூல் மூலம் அறியலாம். அதற்குரிய வழிகளையும் தந்துள்ளது இவ்வாய்வு.
Details
- Publication Date
- May 28, 2022
- Language
- Tamil
- ISBN
- 9789392293047
- Category
- Reference
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): முனைவர் த. சத்தியராஜ்
Specifications
- Format
- EPUB